பாஜக வென்றால் தான் மதுரைக்கு மெட்ரோ வருமா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்

பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் வென்று பிரதமர் மோடியை அணுகினால் மதுரைக்கு மெட்ரோ வரும் கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News