Thursday, December 4, 2025

தங்க நகை காணாமல் போனால் இழப்பீடு கிடைக்குமா? பலருக்கும் தெரியாத உண்மை

தங்கத்தின் மீதான நாட்டு மக்களின் முதலீடு நாளே நாளாக அதிகரித்து வருகிறது. விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் தங்கம் நம்பகமான முதலீடாகவே கருதப்படுகிறது. அதனால், தங்கத்தின் முதல் மற்றும் விற்பனை குறையாமல் தொடர்கிறது. சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

சமீபத்தில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரப்படி, இந்தியாவின் குடும்பங்களில் 34,600 டன் தங்கம் இருப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது. இது ஆபரணங்கள், நாணயங்கள் அல்லது கட்டிகளாக இருக்கலாம். இப்போது சந்தை விலை அடிப்படையில், இதன் மதிப்பு சுமார் 3,37,000 கோடி ரூபாய் அளவிலுள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொருபுறம் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வீடுகளில் புகுந்து கொள்ளை , சாலையில் நடக்கும் போது கழுத்தில் இருக்கும் தங்க செயின்கள் பறிக்கப்படுவது போன்ற சம்பவங்களை நாம் அதிகம் காண முடிகிறது.

நம்முடைய தங்க நகை திருடு போய்விட்டால் நான் என்ன செய்வோம், காவல்துறையில் புகார் அளிப்போம். ஆனால் நம்முடைய திருடு போன நகை நமக்கு கிடைக்குமா என்றால் அதை 100 சதவீதம் நிச்சயமாக கூற முடியாது. இதனால், பெண்கள் தங்களுடைய தங்க நகைகளை எப்படி பாதுகாப்பது என்பது பெரிய கேள்வியாக மாறுகிறது.

நகைகள் திருடப்பட்டால் அது ஈடாக என்ன செய்யலாம் என்பது பற்றி அறிந்தவர்கள் குறைவு. நகைகளுக்கு காப்பீடு செய்வதன் மூலம், திருடப்பட்ட நகைகளுக்கான பணத்தை பெற முடியும் என்பதை வெளிப்படையாக சொல்லலாம்.

இன்றைய தினத்தில் பல நகைக்கடைகள் தங்க நகைகளுக்கு காப்பீடு செய்வதை வாடிக்கையாளர்களிடம் கேட்கிறார்கள். நீங்கள் வாங்கிய தங்க நகைக்கு காப்பீடு செய்யலாம். தற்போது பல நகைக்கடைகளில் நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு காப்பீடு செய்து தருகின்றனர். அதுமட்டுமின்றி நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு மில் போடும் போது காப்பீடு வேண்டும் என்றும் கேட்டு வாங்கலாம்.

நாம் நம்முடைய தங்க நகைகளை காப்பீடு செய்யும் பட்சத்தில் நம்முடைய நகை திருடு போனால் நகையின் மொத்த மதிப்பும் திரும்ப கிடைக்கும். தங்க நகை மட்டுமல்ல, வைரம், வெள்ளி, நவரத்தின நகைகளையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

தங்க நகைகள், வைரம், வெள்ளி, நவரத்தின நகைகளுக்கு கூட இந்த காப்பீடு பொருந்தும். வீட்டில் கொள்ளை, வெளியே நடந்த நகைப் பறிப்பு, வங்கி லாக்கர் களவாடல், தீ விபத்து, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் போன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் காப்பீடு தொகை கிடைக்கும். பொதுவாக, தங்கத்தின் மதிப்பின் 95% வரை காப்பீடு வழங்கப்படுவதாகும்.

ஆனாலும், கவனக்குறைவால் அல்லது மறந்து போகும் நகைக்கு, போர், பயங்கரவாதம், கலவரம் போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு கிடைக்காது. நகை காணாமல் போனால், உடனுக்குடன் காவல்நிலையத்தில் FIR பதிவு செய்து, அதற்கான நகல், வாங்கிய ரசீது மற்றும் காப்பீடு ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அளிக்க வேண்டும். இது விசாரணைக்குப் பிறகு, உண்மையான இழப்புக்கு இடம் இருந்து இருந்தால், காப்பீடு தொகை வந்து விடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News