தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
தி.மு.க. – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கேட்டதாகவும், தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கூட்டணியை தக்கவைக்க கடைசி வாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எம்.பி. கனிமொழி, செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.
