Thursday, May 29, 2025

2026ம் ஆண்டு ‘CSK’ கேப்டன்?  ‘ஓபனாக’ பேசிய தல Dhoni

முதன்முறையாக IPL தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10வது இடத்தில் நிறைவு செய்துள்ளது. என்றாலும் கடைசியாக குஜராத்துக்கு எதிராக CSK 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், ரசிகர்கள் நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை மீண்டு வரும் என, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸிக்கு பதிலாக, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை சமீபத்திய நேரலையில் ரெய்னாவும் உறுதி செய்துள்ளார்.

இந்தநிலையில் 2026ம் ஆண்டு சென்னை அணியை, கேப்டனாக யார் வழிநடத்தப் போகிறார்கள்? என்னும் கேள்விக்கு தோனி நேரடியாக பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ” என்னுடைய ஓய்வு குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை.

முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. அணியில் இன்னும் சில ஓட்டைகள் இருக்கின்றன. அடுத்த வருடம் ருதுராஜின் கையில் அணியை ஒப்படைக்கும் முன்னர், இந்த குறைகள் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும்,” என்று பேசியிருக்கிறார்.

காயத்தால் ருதுராஜ் விலகியதால் மீண்டும் அவரை, சென்னை அணியில் சேர்க்காது. ஒருவேளை அணிக்குத் திரும்பினாலும், அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது. இவ்வாறு பலவிதமாக ருதுராஜ் குறித்து தகவல்கள் அடிபட்டு வந்தன. தற்போது தோனி அவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்களின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நூர் அஹமது, ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், அன்ஷூல் கம்போஜ் என்று, இளம்வீரர்களை வைத்து தங்களின் பிளேயிங் லெவனை CSK கட்டமைத்து வருகிறது. இதனால் 2026ம் ஆண்டு IPL கோப்பை சென்னைக்குதான் என்று ரசிகர்கள், ஆரூடம் கூறி வருகின்றனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news