தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக செய்து விட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, “தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை” என்று கூறினார். தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக்கும் பட்சத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கலந்துரையாடல் நடத்தி பா.ஜ.க. தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.