வேலையை பறிக்கும் AI., இன்னும் பல ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும்?

2025ஆம் ஆண்டின் இறுதிக்குள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆட்டோமேஷன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் ஐடி துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. இதனால் வேலையில்லாத நிலைக்குச் சென்றுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது 218க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, அமெரிக்காவின் இந்தியா தொடர்புடைய சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் நிறுவனத்தில் 24,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களையும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமும் 20,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

இன்டெல் நிறுவனத்தின் போட்டியாளர்களான என்விடியா (Nvidia) மற்றும் ஏஎம்டி (AMD) நிறுவனங்களின் போட்டியைச் சமாளிப்பதற்காக செலவுகளைக் குறைக்கவும், AI சார்ந்த தயாரிப்புகளில் கவனம் செலுத்தவும் இந்த நடவடிக்கையை இன்டெல் நிறுவனம் எடுத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலை இழப்புகள் இந்த ஆண்டு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை போயுள்ள நிலையில், இன்னும் பலருக்கு வேலை போகும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

Related News

Latest News