தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த மின்சார பேருந்துகளில் ரூ.1,000- பயண அட்டை செல்லுமா? என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்க்கான விளக்கத்தை சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஆயிரம் ரூபாய் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பேருந்தில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போல சிங்கார சென்னை கார்டு வைத்து இருக்கும் பயணிகளும் இதில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.