Monday, December 1, 2025

வீடு புகுந்து கணவனை தாக்கிய மனைவியின் கள்ளக்காதலன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உமர் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருப்பினும் ஜீவா திருமணத்தை மீறி அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபருடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.. இதனை அறிந்த ஜீவாவின் கணவர் அப்புன்ராஜ், பிரேம்குமாரை கண்டித்துள்ளார். இதையடுத்து ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து உறங்கிக் கொண்டிருந்த அப்புன் ராஜ்ஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட ஐந்து இடங்களில் படுகாயம் அடைந்த அப்புன் ராஜ் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய பிரேம்குமாரை கிராமிய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை சரமாரியாக வெட்டிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News