திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சுலோச்சனா, தனது கள்ளக்காதலன் வேதநாயகத்துடன் பைக்கில் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சுலோச்சனாவுடன் வந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள், ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயம் அடைந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
