Thursday, January 15, 2026

இன்ஸ்டாகிராமில் மூழ்கிய மனைவி., ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே. இவருடைய மனைவி சிமாதேவி (வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

சிமாதேவி எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27-ந் தேதி இரவு இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வேண்டாம் என மனைவியை ஜெகதீஷ் குர்ரே கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் குர்ரே தனது மனைவி அணிந்திருந்த துப்பட்டாவை வைத்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் உடலை வீசி விட்டு, அதன் மீது துப்பட்டாவால் மூடி வைத்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகதீஷ் குர்ரேவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News