Wednesday, December 24, 2025

தேனிலவு சென்றபோது கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம். இவர்கள் இருவரும் மேகாலயாவில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில், மே 23 ஆம் தேதி அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் ரகுவன்ஷி உடலை சடலமாக மீட்டனர். அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் கையிலிருந்த மோதரமும் காணாமல் போனதால் கொலையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மனைவி சோனத்தை போலீசார் இன்று (ஜூன் 9) கைது செய்துள்ளனர். மேலும் அவர்தான் அவரது கணவரை கொலை செய்துள்ளார் என்றும் போலீசார் குற்றஞ்சாட்டி உள்ளனர். மனைவி சோனம்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்து அவரது கணவரை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related News

Latest News