Monday, August 11, 2025
HTML tutorial

ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள், மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களா? – அரசு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்

மதுரை மாவட்டம் கைத்தறி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் “ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா? என கேள்வி எழுப்பினர்.

டாஸ்மாலக் கடையை நடத்துவது அரசின் வேலையா?. அரசு ஏன் நடத்த வேண்டும்?. அரசின் பணி இல்லை. எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள். மதுவே ஊழல் போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணம். வேலைவாய்ப்பு, பொது நலன் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News