Wednesday, December 24, 2025

விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு போடப்பட்டது ஏன்? – அண்ணாமலை விளக்கம்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கிறது என தகவல் வந்ததால் அவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும். இதில் அரசியல் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News