சூரியனின் கொரோனா கொதிப்பது ஏன்? அதன் உள் பகுதிகளைவிட அதிக வெப்பமாக இருப்பது எப்படி?

விஞ்ஞான உலகத்தையே ஆச்சரியப்பட வைத்த கேள்வி ஒன்று. “சூரியனின் வெளிப்புற கொரோனா (Corona) பகுதி, அதன் உள் பகுதிகளைவிட ஏன் அதிகமாக சூடாக உள்ளது?” என்பதே. பொதுவாக, ஒரு பொருளின் மையம் தான் அதிக வெப்பமாயிருக்கும். ஆனால் சூரியனின் விஷயத்தில் அது மாறுபட்டது.

சூரியனின் மேற்பரப்பான Photosphere பகுதியில் வெப்பநிலை சுமார் 5,500°C மட்டுமே. ஆனால் அதன் வெளிப்புற மண்டலமான Corona வில் வெப்பநிலை 10 முதல் 20 லட்சம் டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கிறது! இதுவே “Corona Heating Mystery” எனப்படும் புதிரை உருவாக்கியுள்ளது.

இதைப் புரிந்துகொள்ள, விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக ஆய்வு செய்து வருகிறார்கள். நாசாவின் “Parker Solar Probe” எனப்படும் விண்கலம் இதற்காகவே அனுப்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, சூரியனின் காந்த அலைகள் மற்றும் நுண்ணிய பிளாஸ்மா அதிர்வுகள் தான் கொரோனா-வில் வெப்பத்தை திடீரென உயர்த்துகின்றன என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த மர்மம் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனித அறிவை பிரபஞ்சத்தின் அடுத்த அடிக்கு கொண்டு செல்கிறது என்பதே உண்மை.

Related News

Latest News