த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் நடந்து முடிந்தது. இதில் விஜய் பேசிய பேச்சை கண்டித்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த மாநாட்டில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று குறிப்பிட்டார். திரும்ப திரும்ப ஸ்டாலின் ‘அங்கிள்’ என்று விஜய் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது : அணில் ‘ஜங்கிள் ஜங்கிள்’ என்று தான கத்த வேண்டும் ஏன் ‘அங்கிள் அங்கிள்’ என கத்துகிறது; கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார் என கேள்வி எழுப்பினார்.