அறுவை சிகிச்சை அறையில், நீங்கள் மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற உடைகள் அணிந்திருப்பதை கவனித்திருக்கலாம். இதற்கான முக்கிய காரணம், நீல மற்றும் பச்சை நிறங்கள், நம் கண்களுக்கு இதமானவை. அவை சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைப் போலல்லாமல், கண் சோர்வை ஏற்படுத்தாது.
அறுவை சிகிச்சையின் போது இரத்தம் மற்றும் உடல் உறுப்புகளின் சிவப்பு நிறத்தைக் கவனிக்க வேண்டும். பச்சை மற்றும் நீல நிறங்கள், சிவப்பு நிறத்திற்கு எதிராக உள்ளன. இவை மருத்துவர்களின் கவனத்தை சிதறடிக்காமல், அறுவை சிகிச்சையில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகின்றன.
நீல நிறம் அமைதி, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பச்சை நிறம், ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மருத்துவமனைகளில் இந்த வண்ணங்கள் பயன்படுத்துவதால், நோயாளிகளுக்கு ஒரு நம்பிக்கை உணர்வு ஏற்படுகிறது. அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுகிறது.