Monday, December 22, 2025

விஜய் பாஜகவின் அடிமை, பாஜகவை எதிர்த்து பேசாதது ஏன்? – டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய், வழக்கம்போல திமுகவை தாக்கி பேசினார்.

விஜயின் பேச்சுக்கு திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது : விஜய்க்கு அண்ணாவை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் முதல்வராக வேண்டும் என்ற நோக்கில் கட்சி தொடங்கவில்லை. மக்களுக்காக போராடுவேன் என்று கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.

அண்ணாவின் கொள்கைகளை தான் திமுக தற்போது வரை நிறைவேற்றி வருகிறது. அதேபோல் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்காத பாஜகவை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்? தமிழ்நாடு பிரச்சனை பற்றி விஜய் என்ன பேசி இருக்கிறார். விஜய் பாஜகவின் அடிமையாக இருக்கிறார்.

தன் மீது தவறு இருப்பதால் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்தும் ஒருபோதும் பேச மாட்டார். கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News