எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறவே இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.
அதிமுக- வை ஒன்றிணைப்பதற்காகவே அமித்ஷாவை சந்தித்தேன் என்றும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவை சந்தித்து விளக்கம் அளித்ததாகவும், அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை அமித்ஷாவிடம் கூறினேன் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
