Wednesday, July 30, 2025

“90களின் ராஜா ‘VIDEOCON’ வீழ்ந்த கதை !

ஒரு காலத்தில் இந்தியாவின் டெலிவிஷன் உலகத்தில் “விடியோகான்” என்ற பெயர் வெறித்தனமான புகழ் பெற்றது. TV, வாஷிங் மெஷின், ரெஃபிரிஜிரேட்டர், மேலும் 90களில் முதல் 2000களில் வரை இது இந்திய குடும்பங்களில் ஒரு முக்கிய பெயராக இருந்தது. ஆனால் இன்று? விடியோகான் இல்லாததற்கான காரணம் என்ன தெரியுமா ?

இதற்குப் பின்னணியில் இருப்பது ஒரு சிக்கலான ஃபைனான்ஸ் பந்தயம்.

வீணான விரிவாக்கம் தான் இதற்கு மூலகாரணம். ஹோம்அப்லையன்ஸில் இருந்த வெற்றியைத் தொடர்ந்து, டெலிகாம் துறையில் “விடியோகான் மொபைல்” என்ற பெயரில் விரிவான முதலீடுகளை செய்தது. ஆனால், இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ போன்ற பெரிய வீரர்கள் வந்ததும், போட்டியில் விடியோகான் பின்னடைந்தது.

பின்னர் வந்தது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஊடாக பெறப்பட்ட கடன்கள். விடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத், வங்கியின் CEO சந்தா கோச்சார் மூலம் பெரும் தொகையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் கடன்களை வாங்கினார். ஆனால் இது நேர்மையான வணிகமாக இல்லாமல், பரஸ்பர நலன்கள் அடிப்படையில் நடந்ததாகவும், பத்திரிகைகள் மற்றும் அரசு விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து 2020ல், விடியோகான் கம்பனி, ₹90,000 கோடி கடனுடன் தீவிர நட்டத்தில் மூழ்கியது. NCLT வழக்கில் இந்த நிறுவனம் திவாலாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருந்த விடியோகான், சொந்த லாபத்தில் இருந்து, தவறான நிர்வாக முடிவுகள் மற்றும் நெருக்கடியான நிதி நடவடிக்கைகள் காரணமாக கடும் வீழ்ச்சியை சந்தித்து இப்போது இல்லாமலே போனது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News