தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற்றுள்ளதாக தி.மு.க., அரசு கூறுகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் ஏன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், உயர் பொறுப்புகளில் இருப்போர், அரசு மருத்துவமனைகளுக்கு போகும் போது, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முதல்வர் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். எனவே, தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என, பிரித்து பார்க்கக்கூடாது.
அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருப்பதால் தான், 2021க்கு பின், நோயாளிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.