கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை தவெக அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க தவெக அலுவலகம் வந்தனர். போட்டோ, சிசிடிவி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும்படி சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். பரப்புரை வாகனத்தில் இருந்த சிசிடிவி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை 3 நாட்களில் தருவோம். எங்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை. சம்மன் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராவோம் என்றார்.
