விராட் கோலி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் ஷாக் அளித்துள்ளார். கோலியின் ஓய்வு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் உருக்கமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியா ஊடகம் ஒன்று விராட்டின் Retire குறித்து, ”140 கோடி மக்களின் இதயங்களை உடைத்து விட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான்கள், விமர்சகர்கள், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவருமே, குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் கோலி விளையாடி இருக்கலாம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் விராட்டின் ஓய்வுக்கு பின்னால், BCCIயின் திரைமறைவு வேலைகள் அரங்கேறி இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இளம்வீரர் ஒருவருக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வழங்க BCCI முடிவு செய்ததே இதற்கு முழுமுதல் காரணமாகி இருக்கிறது.
தான் எதிர்பார்க்கும் சுதந்திரம், ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் ஆகியவை இனிமேல் இந்திய அணியில் இருக்காது என்பதை உணர்ந்து தான், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்தநிலையில் விராட் ஓய்வு அறிவிப்பதற்கு முன் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ICC தலைவர் ஜெய்ஷா, IPL சேர்மன் ராஜிவ் சுக்லா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் பேசியதாகத் தகவல்கள் அடிபடுகின்றன.
குறிப்பாக BCCI தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம், விராட் இரண்டு முறை பேசியிருக்கிறார். எதிர்பாராவிதமாக இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றங்கள் எழுந்ததால், விராட் ஓய்வு குறித்து BCCIயால் கலந்தாலோசிக்க முடியவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு BCCIயின் கெஞ்சல்களை துளியும் மதிக்காமல், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். விராட்டுக்கு முன்னால் BCCIயின் அத்தனை ராஜதந்திரங்களும் தோற்றுப்போய் விட்டன.