Wednesday, January 22, 2025

“நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுறான்” : விஜய்யை ஒருமையில் சாடிய ஆர்.எஸ் பாரதி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், 910வது நாளாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் நேரில் சென்று சந்தித்து பேசினார்.

அப்போது விஜய் பேசியதாவது : “நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே”. என அவர் பேசினார்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ”எல்லாம் ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான். அவங்க அப்பனையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். அவன் எல்லாம் இப்பொழுது நமக்கு சவால் விடுகிறான். ஒன்றை மட்டும் சொல்கிறேன் திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததாகவும் இல்லை நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது அதற்குள்ளே போகக்கூடாது. பேசுவதற்கு ஒரு யோகிதை வேண்டும். நேற்று அந்த சின்ன பையன் பேசுகிறான் நாடகமாடுவதில் நாங்கள் எல்லாம் கைதேந்தவர்கலாம். நீ யார்ரா? உங்க அப்பன் யாரு? உங்க அம்மா யாரு? என கேட்டால் பதில் சொல்ல முடியுமா? ஆக நடிப்பது மட்டுமல்ல நடிப்பதற்கு வசனம் எழுதிக் கொடுத்து நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்து விடக்கூடாது” என அவர் பேசியுள்ளார்.

Latest news