Friday, September 26, 2025

“யாரு சாமி நீ?”.. அக்கா கணவரை பழிவாங்க வாலிபர் செய்த செயல்!! என்ன நடந்தது?

அக்கா,தம்பி பாசத்தை பல சினிமா திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம்.ஒரு குடிகாரனாகவோ, கொள்ளைக்காரனாகவோ அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் அக்கா கணவரை திருத்துவதற்காக அவருடைய மைத்துனர் திரைப்படம் முழுவதும் போராடி, முடிவில் அனைத்தும் சுபமாக முடியும். இது மாதிரியான காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்து இருப்போம். “ஆனா ந அப்டி இல்ல டி” என்ற அளவுக்கு இங்க நடந்ததே வேற, அதாவது உத்தரபிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா! என்று கேட்கும் அளவிற்கு அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.கேசவ் குமார் மனைவிக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் உள்ளனர்.
இந்த நிலையில், ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் அதாவது மனைவியின் தங்கை கல்பனாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டியதாக சொல்லப்படுகிறது. கேசவ் குமாரின் இந்த செயல், அவருடைய மைத்துனர் அதாவது மனைவின் தம்பி ரவீந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திருக்கிறது. அக்கா கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், நம் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கருதினார். ஆகையால், அக்கா கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டம் போட்டதாக தெரிகிறது. இதற்கிடையே அவர் கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அக்கா கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர்.இந்த நிலையில் போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு , அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து பேசிவத்தை நடத்தி அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.என்னத்தான் பிரச்சனை சுமுகமாக முடிந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News