உடல் ஆரோக்கியத்துக்கும் சரும அழகுக்கும் மஞ்சள் எவ்வாறு பலனளிக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஆனால் பல நோய்களுக்கும் மருந்தாகும் வெள்ளை மஞ்சளை பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பூலாங்கிழங்கு என தமிழில் அழைக்கப்படும் இந்த மஞ்சளுக்கு Zedori, Amba Turmeric போன்ற பெயர்களும் உள்ளன. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மஞ்சள் கிழங்கு சற்று இஞ்சியின் சுவையை ஒத்திருக்க கூடியது.
தேவையற்ற திரவங்கள் சேர்வதால் ஏற்படும் மூட்டுவலியை சரி செய்யும் ஆற்றல் கொண்ட வெள்ளை மஞ்சள், சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இம்மஞ்சளில் இருக்கும் குர்க்குமெனால் காயங்கள் விரைவாக ஆற உதவுகிறது. இது உடலில் அழற்சி காரணமாக உண்டாகும் ஆஸ்துமா மற்றும் மூட்டுவலியை விரட்டுகிறது.
பசியின்மை, வயிற்றுப்பூச்சி, வாயு, மலச்சிக்கல், உப்புசம் என அனைத்து செரிமான கோளாறுகளுக்கும் வெள்ளை மஞ்சள் தீர்வாக அமைகிறது. குர்குமின் மற்றும் குர்க்குசெடோலைட் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு உட்பொருட்களை கொண்டுள்ள பூலாங்கிழங்கின் நீரை குடித்து வந்தால் மார்பக மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய் பாதிப்பை குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளை மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பல விதமான ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் ஆகியவற்றை குறைக்கும் வெள்ளை மஞ்சள் தலைமுடி உதிர்வை தடுப்பதோடு புதிய முடி வளர்வதற்கும் காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.