பலர் டிபனை விட சாதம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அரிசி ஒரு முக்கிய உணவாகும். இது போதுமான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சாப்பிடுவது வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும்.