Saturday, December 27, 2025

மோன்தா புயலால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் 27-ந்தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளான மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது புயல் சின்னத்தின் நகர்வுகளின் படி சென்னைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளிலும், ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் 27 மற்றும் 28-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News