Friday, June 27, 2025

ராணுவ டாங்கிகள் ‘அதிகமுள்ள’ நாடுகள் இந்தியா எத்தனாவது ‘இடத்துல’ இருக்கு?

ரஷ்யா -உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் நாடுகளின் நேரடி மோதலால் 3வது உலகப்போர் மூண்டாலும் ஆச்சரியமில்லை, என்னும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். தொழில்நுட்பம் எந்தளவிற்கு வளர்கிறதோ அந்தளவுக்கு அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வல்லரசு நாடு என்ற அந்தஸ்தினை தக்க வைத்துக்கொள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளும், ஆயுத பலம் தான் நமக்கு பாதுகாப்பு என்று வளரும் நாடுகளும் போட்டிபோட்டு ராணுவத்துக்கு நிதி ஒதுக்குகின்றன. அந்தவகையில் அதிக ராணுவ டாங்கிகளை வைத்திருக்கும், உலகின் டாப் 10 நாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

லிஸ்டில்  6,800 டாங்கிகளுடன் சீனா முதலிடத்தில் கெத்து காட்டுகிறது. 5,750 டாங்கிகளுடன் இரும்புத்திரை நாடு ரஷ்யா 2வது இடத்திலும், 4,640 டாங்கிகளுடன் அமெரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன. 4,344 ராணுவ டாங்கிகளுடன் வடகொரியா நான்காம் இடத்திலும், இந்தியா 4,201 டாங்கிகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.

பிரமிடுகளுக்கு பேர் போன எகிப்து இதில் 3,620 டாங்கிகளுடன் 6ம் இடத்தை பிடித்துள்ளது. ஆச்சரியமாக பாகிஸ்தான் 2,627 டாங்கிகளுடன் இதில் 7ம் இடத்தினையும், அண்மையில் இந்தியாவிற்கு எதிரியாக மாறிய துருக்கி 2,238 டாங்கிகளுடன் 8ம் இடத்தையும் எட்டி பிடித்துள்ளது.

ராணுவ பயிற்சியை கட்டாயமாக்கி இருக்கும் தென் கொரியா 2,236 டாங்கிகளுடன் 9ம் இடத்தையும், அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய ஈரான் 1,713 டாங்கிகளுடன் 10ம் இடத்தையும் பிடித்துள்ளன.

போர் தாக்குதலுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், சைபர் போர் போன்றவற்றை நாடுகள் முக்கியமாக கருதினாலும் கூட, ஒரு நாட்டின் பாதுகாப்பு வலிமைக்கு டாங்கிகளும் முக்கியம் என்பதால், அவற்றின் எண்ணிக்கையை வைத்தும் நாடுகளின் ராணுவ வலிமை மதிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news