பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை டிசம்பர் 15ம் தேதி முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே சாா்பில் ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தைப் பொங்கலுக்காக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து மொத்தம் 150 சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பொங்கலுக்கு சொந்த ஊா் சென்றவா்கள் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் ஜனவரி 16ம் தேத முதல் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
