மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசு நடத்திய ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாம்கள் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றன. நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் நடைபெற்ற இந்த முகாம்களில், மக்கள் பல்வேறு துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றனர்.
நவம்பர் 15 ஆம் தேதி வரை நடந்த முகாம்களில், சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும் பணி அரசு தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த பெண்களின் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கவனமாக ஆய்வு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த முன்மாதிரி ஆய்வுகள் முடிந்தவுடன், தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், வருமான வரி தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். மற்ற விண்ணப்பித்தவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, அவர்களின் கணக்கில் ஒரு ரூபாய் டெஸ்ட் மணியாக அனுப்பி சரிபார்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அண்மையில் திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
வரும் டிசம்பர் 15 ஆம் தேதி, விடுபட்ட அனைத்து தகுதி பெற்ற மகளிருக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 கலைஞர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
