Wednesday, January 7, 2026

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

சுமார் 1,600 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளதால் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related News

Latest News