அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்திற்கு 130 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளும் அடங்கும். தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக, அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திடம் பேருந்துகள் ஒப்படைக்கப்படும் என்றும் அடுத்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
