Thursday, August 14, 2025
HTML tutorial

ஏப்ரலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் Refund எப்போது கிடைக்கும்? 7 நாட்களுக்குள் பெற முடியுமா? முழுமையான விளக்கம்!

புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இப்போது வரி செலுத்துவோர் 2025-26 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கை அதாவது ITR எப்போது தாக்கல் செய்யலாம் என்று Plan போட்டுக்கொண்டு இருப்பார்கள். முதலில் வருமான வரித்துறையால் நடப்பு ஆண்டிற்கான படிவங்கள் அறிவிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏழு வெவ்வேறு ITR படிவங்கள் அறிவிக்கப்பட்டதால் இந்த ஆண்டும் தேவையான படிவங்கள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான சம்பளம் பெறும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வருமான வரி தாக்கலுக்கான படிவம் 16 ஐ வெளியிடும் வரை காத்திருக்கும் நிலையில் ITR தாக்கல் செய்வதற்கு படிவம் 16 கட்டாயமில்லை எனவும் வரி செலுத்துவோர் அதற்குப் பதிலாக பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

படிவம் 16 குறிப்பிட்ட நிதியாண்டில் ஓர் ஊழியருக்குச் செலுத்தப்பட்ட சம்பளம் மற்றும் TDS விவரங்களைக் குறிப்பிடுவதால் இது வருமான வரி தாக்கல் செயல்முறையை மிகவும் எளிதாக்கிவிடும் என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அது கட்டாயமில்லை.  மாதாந்திர சம்பள ரசீதுகள், படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை அதாவது AIS மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் அதாவது TIS போன்ற பொருத்தமான ஆவணங்கள் இருந்தால், படிவம் 16 இல்லாமலே வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆவணங்களைக் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே யாராவது வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்தால், 7 நாட்களுக்குள் Refund பணத்தைப் பெற முடியுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தின் துல்லியத்தன்மை, TDS மற்றும் வருமான விவரங்கள் படிவம் 26AS மற்றும் AIS உடன் பொருந்துகிறதா என பல காரணிகளைப் சரிபார்த்த பிறகுதான் பணத்தை விடுவிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

மேலும், வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு முன்கூட்டியே கணக்கிடப்பட்டு PAN எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் மாதச் ஊதியம் பெறும் வரி செலுத்துவோரில் பலர் ஒரு வாரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றாலும், செயலாக்க நேரம் மாறுபடலாம் எனவும் ஒவ்வொரு நபரும் தாக்கல் செய்துள்ள விவரங்களின் சரியாக இருப்பதை பொறுத்து காலக்கெடு மாறும் எனவும் தகவல்கள் சொல்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News