வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுநாள் புயல் உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 28 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் மொந்தா புயல் கரையை கடக்கும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
