உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் ஐடி-யை இணைக்கும் வகையில் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
Also Read : தொல்லை கொடுக்கும் ஸ்பேம் கால்கள் : TRAI எடுத்த அதிரடி முடிவு
வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராமின் கணக்கை இணைக்கும் இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனர்களுக்கும் பெற்று வருகின்றனர். விரைவில் மற்ற பயனர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.