உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோரின் செல்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ்அப் இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், வாட்ஸ்அப்பின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்தது. அதன்படி, தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு இடையில் விளம்பரங்கள் காட்டப்பட்டு வருகின்றன. இது சில பயனர்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விளம்பரமில்லா சேவையை வழங்க புதிய கட்டண திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் கட்டணம் சுமார் €4 (இந்திய மதிப்பில் ரூ.433) ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
