Thursday, July 31, 2025

தளபதி Vs இளையதளபதி – வைரலாகும் வாட்ஸ்அப் உரையாடல்கள்

விஜயின் 66வது படமான ‘வாரிசு’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் வெளியான ‘வாரிசு’ படத்தின் ட்ரைலர் 39 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், விஜயின் பழைய படங்களில் இருக்கும் வசனங்களை அவரது ரசிகர்கள் ‘வாரிசு’ பட dialogueகளுடன் ஒப்பிட்டு பல editகளை செய்து வருகின்றனர்.

‘சச்சின்’ திரைப்படத்தில், ‘அன்புனாலும் சரி, அடினாலும் சரி, நம்ம கிட்ட காட்டுறத விட நூறு மடங்கு…’ என தொடங்கி ‘சொல்ல விடுங்கன்னா ஒரே ஒரு punch dialogueஎ’ என்று வசனம் பேசியிருப்பார் இளையதளபதி விஜய். இதன் தொடர்ச்சி போல அமையும் ‘அன்போ ஆடியோ எனக்கு குடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு குடுக்கனும்…’ என்ற தளபதி விஜயின் டயலாக் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதே போல, ‘பூவே உனக்காக’ படத்தில் உதிர்ந்த பூவை ஓட்ட வைக்க முடியாது என்ற இளையதளபதி விஜயின் வசனத்துக்கு அதெல்லாம் gum போட்டு ஓட்ட வச்சுக்கலாம்பா என வாரிசு படத்தில் counter கொடுக்கும் தளபதி விஜயின் டயலாக் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே, அதை அப்படியே இளையதளபதி to தளபதி என ஒரு வாட்ஸப் உரையாடல் போல எடிட் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CnHRQ7TLTfR/?utm_source=ig_web_copy_link

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News