இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் பயனாளர்கள் கணக்குகளை பாதுகாக்க மெட்டா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியர்கள் பயன்படுத்தும் 84 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கி உள்ளது. விதிகளை பின்பற்றாமல் தவறான நோக்கங்களுக்கு கணக்குகளை பயன்படுத்தியதால் அந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக மெசேஜ்களை (Bulk messages) அனுப்புவது, விதிகளை மீறி சட்ட விரோதமாக, தவறாக செயல்பட்டால் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படும் என எச்சரித்துள்ளது.