பிரபல வீடியோ பகிரும் தளமான யூடியூபில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வீடியோவும் சில வினாடிகளில் இருந்து பல மணி நேரங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுவது உண்டு.
அந்த வகையில், 140 ஆண்டு நீளமுள்ள வீடியோ ஒன்று யூடியூபில் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. @shinywr என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் கடந்த 2023 ஆம் ஆண்டு வடகொரியாவில் துவங்கப்பட்டதாக காட்டப்படுகிறது.
இவ்வளவு நீளமான வீடியோவை எப்படி யூடியூபில் பதிவேற்றம் செய்ய முடியும் எனவும், இது யூடியூப் நிறுவனம் சோதனைக்காக உருவாக்கப்பட்ட சேனலாக இருக்கலாம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
