நவம்பர் 2025-ல் இந்தியாவில் தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்றே சர்வதேச பொருளாதார போக்குகள் கணிக்கின்றன. முதலில், உலகளாவிய சந்தையில் தங்கம் “சேகரிக்கப்படும் பாதுகாப்பான முதலீடு” வகையாக இருப்பதால், வர்த்தக மோதல்கள், மத்திய வங்கிகளின் வங்கிப் பங்குகள் அதிகரிப்பு, மற்றும் பணவீக்க ஆபத்துகள் போன்றவை தங்கம் மீது தேடலை உயர்த்தலாம்.
இந்த நிலையில், இந்திய சந்தை பாதிக்கப்படுகிறது. உண்மையில், கடந்த மாதத்தில் இந்தியாவில் 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு சுமார் 11,000 ரூபாய் முதல் 11,500 ரூபாய் வரை விற்கப்பட்டது.
முக்கியமாக இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஈர்க்கலாம். இதனால் தங்கத்தின் விலை உயரவே அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் திருமண காலம் மற்றும் பண்டிகை காலம் வரவிருப்பதால் தங்கம் வாங்கும் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். அந்த நேரங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் விலை உயரவே செய்யும் என கருதப்படுகிறது,
ஆனாலும், Citi போன்ற சில மதிப்பீட்டு நிறுவங்கள் வரும் காலகட்டத்தில் விலை சரிந்து குறையலாம் எனவும் கூறியுள்ளன. மொத்தத்தில் பார்க்கும் போது, நவம்பர் மாதம் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து செல்லும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
மேலும் supply-demand சீராக இருப்பின் சிறிய அளவில் correction ஏற்படலாம். பல உலக வர்த்தக போக்குகள் தெளிவாக இல்லாத நிலையில், எதிர்பாராத சூழல்கள் விலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் அல்லது முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால் சர்வதேச நகர்வுகள் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில்கொண்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது.
