பிப்​ர​வரி மாதத்தில் ஜிஎஸ்டி மொத்த வசூல் எவ்வளவு?

நடப்​பாண்டு பிப்​ர​வரி மாதத்தில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.83 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது, முந்​தைய 2025ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் வசூலான தொகை​யுடன் ஒப்​பிடு​கை​யில் 8.1 சதவீதம் அதி​கம் ஆகும்.

உள்​நாட்​டுப் பரிவர்த்​தனை​கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வரு​வாய் 5.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.36 லட்​சம் கோடி​யாக உள்​ளது. அதேபோன்​று, வெளி​நாடு​களி​ல் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட பொருட்​கள் மீதான ஜிஎஸ்டி வசூல் 17.2 சதவீதம் அதி​கரித்து ரூ.47,837 கோடி​யாக பதி​வாகி​யுள்​ளது.

நடப்பு நிதி​யாண்​டில் ஏப்​ரல் முதல் பிப்ர​வரி 28 வரையி​லான 11 மாத கால மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்​சம் கோடியை எட்​டி​யுள்​ளது. இது முந்​தைய நிதியாண்டை விட 8.3 சதவீதம் அதி​க​மாகும்.

Related News

Latest News