நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது, தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில் சிக்கி இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி வீர மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல்முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.
விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்றபோது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்” என்று தெரிவித்தனர்.
