அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை வரலாற்று உயர்வை பதிவு செய்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து, விலையில் சிறிதளவு தளர்ச்சி காணப்பட்டது. குறிப்பாக நவம்பர் 6ம் தேதியான நேற்று மட்டும் தங்கம் விலையில் இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு, காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விலை அதிகரித்தது. இதனால் நகை விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,320 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு பதிவாகி, நகை பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்திலும் சற்று சரிவு தென்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,400 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.75,200 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ளதால், வரவிருக்கும் திருமண சீசனுக்கான நகை வர்த்தகம் மீண்டும் வேகமெடுக்குமென வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும் அமெரிக்க Federal Reserve வங்கி வட்டி விகிதத்தை குறைத்தல் தங்கம் விலை உயரக்கூடும். மேலும் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றம், வேறு சில சர்வதேச மாற்றங்கள் தங்கம் விலையில் ஏற்ற இரக்கத்தை உண்டாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
