நம்ம தமிழ்நாட்டுல இப்போ எத்தனை அமைச்சர்கள் இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? சரி, நினைச்ச நேரத்துல ஒரு 50 இல்லனா 60 அமைச்சர்களை நியமிக்க முடியுமான்னு கேட்டா… கண்டிப்பா முடியாது! அதுக்கு நம்ம இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு மிகப்பெரிய ‘செக்’ வைச்சிருக்கு. அதுதான் ‘ஆர்டிகல் 164(1A)’ (Article 164(1A)). இந்த விதியை பத்தியும், 15% கணக்கு எப்படின்னு தான் இந்த வீடியோவுல ரொம்ப சிம்பிளா பார்க்கப்போறோம்.
சட்டப்படி பார்த்தா, ஒரு மாநில அமைச்சரவையில முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களோட எண்ணிக்கை, அந்த மாநிலத்தோட மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கிட்டா மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கு. இப்போ ஒரு சின்ன மேக்ஸ் கணக்கு போட்டுப் பார்ப்போம். 234-ல 15% எவ்வளோன்னு பார்த்தா 35.1 வருது. அப்படின்னா, தமிழ்நாட்டுல அதிகபட்சமா 35 அமைச்சர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.
ஒருவேளை 36-ஆவது அமைச்சரை நியமிச்சா என்ன ஆகும்? கணக்குப்படி பார்த்தா அது 15.38 சதவீதமா மாறிடும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால 36 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை செல்லாது. இதுல இன்னொரு முக்கியமான தெளிவு என்னன்னா, ‘முதலமைச்சர் இந்த 35 பேர்ல சேர்வாரா இல்லையா?’ அப்படிங்கிற சந்தேகம் பலருக்கு இருக்கும். கண்டிப்பா சேருவார்! முதலமைச்சர் பிளஸ் 34 அமைச்சர்கள்… மொத்தம் 35 பேர். இதுதான் சரியான கணக்கு.
சரி, எதுக்காக இந்த விதி? முன்னாடி எல்லாம் “ஜம்போ அமைச்சரவை” அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது ஏகப்பட்ட அமைச்சர்களை நியமிப்பாங்க. இதனால அரசாங்கத்தோட செலவு எக்கச்சக்கமா அதிகமாகும். அதைத் தடுக்கவும், நிர்வாகத்தை ரொம்பத் திறமையா கொண்டு போகவும் தான் இந்த 15% வரம்பைக் கொண்டு வந்தாங்க. அதே மாதிரி, ஒரு மாநிலத்துல குறைஞ்சபட்சம் 12 அமைச்சர்களாவது கண்டிப்பா இருக்கணும்ங்கிறதும் ஒரு விதி.
குயிக்கா ஒரு ரீவிஷன் பண்ணிடலாமா? ஆர்டிகல் 164(1A) படி அமைச்சர்களோட வரம்பு 15%. தமிழ்நாட்டுக்கு அதிகபட்சம் 35 அமைச்சர்கள், குறைஞ்சபட்சம் 12 அமைச்சர்கள் இருக்கணும். TNPSC குரூப்-1, குரூப்-2 எக்ஸாம் எழுதுறவங்களுக்கு இது ரொம்பவே முக்கியமான கரண்ட் அஃபையர்ஸ் டாபிக்.
