சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மை லார்ட்’. ஒலிம்பியா பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வீக் எண்டு நாட்களில் அதாவது கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் நல்ல வசூல் இருந்தால் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட்டான படங்களில் இதுவும் ஒன்றாக இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News