ORS என்றால் என்ன ? எப்படி உதவுகிறது? முழு விளக்கம் இதோ..

Oral Rehydration Solution என்பதை சுருக்கமாக ORS என்று அழைக்கப்படுகிறது.

ORS என்பது வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் பிற காரணங்களால் உடலில் இருந்து திரவங்கள் வெளியேறி நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் முதல் சிகிச்சையாக அமைகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் Energy drink என்று சொல்லாம்.

இந்த ORS-ல் தண்ணீர், உப்பு, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவை உடல் இழந்த திரவங்கள் மற்றும் மினரல்களை உடனடியாக பெற உதவுகிறது.

சரி, இப்படிப்பட்ட ORSல் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ORS- ல் குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம், குளோரைடு, மக்னீசியம் மற்றும் பாஸ்போரஸ் அயனிகள் ஆகியவை ஒரு சமமான அளவில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்த ORS பருகிய உடனே செரிமான அமைப்பில் இருந்து திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை பிரித்து, பின்னர் ரத்த ஓட்டத்திற்குள் நுழைகிறது.

இது உடலில் தண்ணீர், கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்களின் அளவை மீட்டெடுப்பதற்கு உதவிகரமாக அமைகிறது,

ORS எப்படி செயல்படுகிறது பற்றி பார்க்கலாம்.

குடலில் உள்ள செல்கள் இயற்கையான சோடியம், குளுக்கோஸ் போக்குவரத்து அமைப்பு மூலமாக சோடியத்தை குளுக்கோஸ் வழியாக உறிஞ்சி, பின்னர் ரத்த ஓட்டத்திற்குள் தண்ணீரை அனுப்புகிறது.

அளவுக்கு அதிகமான வியர்வை, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற காரணங்களால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்வதற்கான ஒரு பாதுகாப்பான முறையாக இதனை பார்க்கப்படுகிறது

குறிப்பாக , இந்த ORS ஆனது சிறுநீரக செயலிழப்பு போன்ற மோசமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

ORS ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

உலக அளவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறந்து போவதற்கான ஒரு பொதுவான காரணமாக இருப்பது வயிற்றுப்போக்கு. வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் இறப்புகளை ORS பயன்பாடு மூலமாக 93 சதவீதம் குறைத்து இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் வயதான நோயாளிகள் வரை எல்லா வயதினருக்கும் இந்த ORS ஏற்றவாறு இருக்கிறது. மேலும், இதனை பயன்படுத்துவதற்கு எந்த விதமான மருத்துவ உபகரணங்களும் தேவையில்லை.

குறிப்பாக, உடனடி ஆற்றலும், வலுவும் பெற்று குணமடைவதற்கு இந்த ORS பெரும் உதவியாக இருக்கிறது.

இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சரியான முறையில் ORS பயன்படுத்துவது எப்படி?

வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்படும் சமயத்தில் மட்டுமே ORS பயன்படுத்த வேண்டும்.

ORS பாக்கெட்டில் குகொடுக்கப்பட்டுள்ள அதே அளவு தண்ணீரில் ORS பொடியை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது ஆகும்.

குழந்தைகளுக்கு ORS கொடுக்கும்போது வழக்கமான முறையில் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

ORS எந்த அளவு எடுத்துக்கொண்டால் நல்லத என்பதை பற்று பார்க்கலாம்.

ORS எடுத்துகொள்வதற்கான அளவு என்பது வயதை பொருத்து மாறுபடலாம் என்கின்றனர்.

அதாவது, 2 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை வயிற்று போக்கு ஏற்பட்ட பின் 50 முதல் 100ml கொடுக்கலாம்.

2 முதல் 9 வயது சிறுவர்களுக்கு 100 முதல் 200ml அளவும், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 லிட்டர் அளவிலும் குடிக்கலாம்.

குறிப்பாக உங்கள் உணவு பழக்கவழக்கத்தில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை படி பின்பற்றுவது சிறந்தது, மேலும் இவை பொதுவான தகவல்களின் அடிப்படையாக கொண்டவை.

Related News

Latest News