லியோவில் ஜனனியின் கதாபாத்திரம் என்ன? விஜய்க்கு மகளாக நடிப்பது உண்மையா….?

127
Advertisement

லியோ திரைப்படத்தில் இலங்கை பெண் ஜனனியின் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் மற்றும் ஜனனி
லியோ திரைப்படத்தில் ஜனனி நடிப்பது உறுதியான நிலையில், சமீபத்தில் அவரின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.படப்பிடிப்பை முடித்த ஜனனி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார், விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகிக்க ஆரம்பித்துள்ளனர்.

லியோவில் விஜய்யின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதால், அவருடைய மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும், படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியானது.

லியோ படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானதால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் மிகவும் ரகசியமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார்.

இதனால், ஜனனி லியோவில் நடிகர் விஜயின் மகளாக தான் நடிக்கின்றாரா என்று உறுதியாக கூற முடியாது.
படக்குழு தற்போது வெளியீட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளது.

லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையான பார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மிக விரைவில் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.