சமையலில் அடிப்படையான காய்கறியில் தக்காளி முதன்மையானது. தற்போது தமிழகத்தில் தொடர் மழை என்பதால் தக்காளி கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது.
அதாவது, கடந்த வாரத்தில் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு கிலோ தக்காளி 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் தக்காளியின் விலை 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தத நிலையில், இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, பாகிஸ்தானுக்கு அதிக அளவிலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து, 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்குவகிக்கும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி தெரிவித்தார்.
