கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து பேசிய விஜய், தொடர்ந்து ரேஷன் கடைகள் இல்லாத இடம் புதுச்சேரி தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை என்ன?
புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டன. ரேஷன் கடைகள் மூலம் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக புதுச்சேரியில் இலவசமாக அரிசி வழங்கப்பட்ட வந்தது. 2016ஆம் ஆண்டு இலவச அரிசி குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து, அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதார்களுக்கு அரிசிக்கான தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் ரேஷன் கடைகள் இல்லாத இடமாக புதுச்சேரி இருப்பதாக கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் பேசுவது அர்த்தமற்றது
இது குறித்து பேசிய சரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “விஜய் தவறாக பேசியிருக்கிறார் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார். ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்பட்ட வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசுவது அர்த்தமற்றது” எனக் கூறியுள்ளார்.
