இந்த 2025ம் ஆண்டு இறுதியில் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளிவரும் தகவல்கள் மக்களை பதற்றமடைய செய்பவையாகவே இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் எப்போது வேண்டுமானலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அவர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அதிரடி விலை ஏற்றத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் அரசு நடத்தும் BSNL தொலைத்தொடர்பு நிறுவனதின் சிம் கார்டை இப்போது வாங்கி வைப்பது பயன் தரும்.
காரணம், BSNL நிறுவனம் மட்டுமே இப்போது 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் 395 நாள் validity plan-ஐ வழங்குகிறது. இந்த திட்டம் 790 GB data plan-ஐ வழங்குகிறது என்பதால் நீண்ட நாள் வேலிடிட்டி உடன் ஒரு பட்ஜெட் Friendly ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேடுவோருக்கு இது நல்ல Choice-ஆக இருக்கும்.
இதுவரை யாரும் வழங்கிடாத, 1 முறை ரீசார்ஜ் செய்தால் 395 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் என்ற 13 மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தை BSNL தற்சமயம் அறிமுகம் செய்திருக்கிறது. உண்மைதான்… 1 வருடத்தை கடந்து செயல்படும் திட்டமாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் என்ற பெயருடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
இந்த திட்டம் 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டிருப்பதோடு BSNL 2399 Plan 395 நாட்களுக்கு தடையில்லாத unlimited voice calls நன்மையை கொடுக்கிறது. இந்த national roaming மற்றும் free incoming calls நன்மைகளை 395 நாட்களுக்கு கிடைக்கும் படி செய்துள்ளது.
மேலும் இந்த திட்டம் தினசரி 2GB high speed data நன்மையை வழங்குவதோடு மொத்தமாக 790GB டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். மட்டுமல்லாமல் இந்த திட்டம் தினமும் 100 SMS-களையும் வழங்குகிறது என்பது கட்டண உயர்வுகளுக்கு ஆறுதலாக பார்க்கப்படுகிறது.